ETV Bharat / city

‘போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - மருத்துவக் கவுன்சில் அதிரடி

author img

By

Published : Jul 25, 2022, 8:41 PM IST

போலி மருத்துவர்கள் மீது புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் எச்சரித்துள்ளார்.

போலி மருத்துவர்கள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை; தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பினை படிக்காமல் மருத்துவம் பார்த்து வரும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும், இதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டு, போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில், ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில்,தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இருந்து ‘டாக்டர்களை தேடல்’ என்ற செயலி அறிமுகம் செய்துள்ளோம். இந்த செயலி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவசர காலத்திலும், பயனத்தின் போதும், அருகில் உள்ள மருத்துவர்களை தேடுவதற்கு பயனுள்ளதாக அமையும்.

இந்த செயலி மூலம் சிறப்பு மருத்துவர் யார் என்பதை மெடிக்கல், பிற நபர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்வதை விட ஸ்மார்ட் போன் வைத்திருப்பதால், கூகுள் பிளே ஸ்டோரில் ’Search for a Doctor’ செயலி டவுன்லோடு செய்து தெரிந்துக் கொள்ளலாம். இதனை நோய் தன்மை, இருப்பிடத்தின் அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றை வைத்தும் தேடலாம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவர்களின் விபரமும் இந்த செயலியில் இடம் பெற்றிருக்கும். இந்த செயலி பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு மருத்துவக்கவுன்சிலில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் சேர்ந்தது. இதில் 1 லட்சத்து 66 ஆயிரம் டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவர் தேடும் ஆப்பிற்கு 80 ஆயிரம் மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் மேலும் 20 ஆயிரம் மருத்துவர்கள் சேர்வார்கள்.

சட்டப்படி நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையத்தில் இருந்து போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய உத்தரவு வந்துள்ளது. படிக்காத போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு அதிகாரி 15 நாட்களில் நியமனம் செய்யப்பட உள்ளார். மேலும், தொடர்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார்.

மாவட்டங்களில் படிக்காமல் மருத்துவர் என கூறி வருபவர்களையும், டிவிகளில் படிக்காமல் மருத்துவர்கள் என கூறி வருபவர்களையும் சட்டப்படி நடிவடிக்கை எடுக்க அதிகாரிகள் பணியாற்றுவார்கள். இதன் மூலம் அவர்கள் மீது நேரடியாகவே குற்றவியல் மற்றும் குடிமையில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவு
தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவு

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் ’quackery@tmailnadumedicalcouncil.org’ இமெயில் முகவரிக்கு ஆதாரங்களுடன் புகார்களை அளிக்கலாம். மேலும் ’The quackery officer , Tamilnadu medical council, Arumbakkam , Chennai - 600106’ என்ற முகவரியிலும் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பார்மசியில் சிகிச்சை அளித்தாலும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 3 மாதங்களில் அதிரடியாக நடவடிக்கை எடுப்பதற்கு வழக்கறிஞருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

நோயாளியின் விவரங்களை வெளியிட கூடாது: தனியார் மருத்துவமனைகள் நோயளிகளை வைத்து பிரஸ்மீட் வைத்து மருத்துவருடன் இணைந்து செய்தியாளர்களை சந்திக்க கூடாது. அதுபோன்ற புகாரின் மீது எச்சரிக்கை செய்துள்ளோம். இது குறித்து புகார் வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் நோயாளியை குறித்தும், அவரின் ஒப்புதலை பெற்றும் கூறக்கூடாது.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் பேட்டி

நோயாளி சிகிச்சையில் இருக்கும் போது சரி என கூறுவார். ஆனால் 10 ஆண்டுகள் கழித்து யூடிபில் இருக்கும் போது, அவரின் குடும்பத்திற்கு பாதிப்பு இருக்கும். எனவே நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த ரகசியத்தை வெளியிடுவது என்பது குற்றமாகும். எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் வெளியிடக்கூடாது, என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தற்காலிக பணியில் சேர விரும்பாத ஆசிரியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.