உலகெங்கும் கரோனா பரவலைத்தொடர்ந்து பல்வேறு நாட்டினரும் அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
அந்தவகையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் ஒன்று டெல்லி வழியாக 58 பேருடன் நேற்றிரவு (ஆக.10) சென்னை வந்தடைந்தது.
அதேபோல், சிங்கப்பூரிலிருந்து 60 பேரும், துபாயிலிருந்து 179 பேரும் இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தமீட்பு விமானங்களில் வந்த பயணிகள் அனைவருக்கும் மருத்துவ, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் ஆகியவை நடத்தப்பட்டன.
பின்னர் அவர்கள் அனைவரும் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவ கல்லூரிக்கும், கட்டண தங்குமிடங்களான ஹோட்டலுக்கும், சிறப்பு அனுமதி பெற்றவர்கள் வீடுகளுக்கும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கரோனா உறுதி!