ETV Bharat / city

திமுக ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லை - ஜெயக்குமார் - பெரியார் சிலை அவமதிப்பு

திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் திமுக ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லை - ஜெயக்குமார்

author img

By

Published : Sep 28, 2022, 8:04 AM IST

சென்னை: தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனாரின் 118 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவியும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "அதிமுக சார்பில் தமிழர் தந்தை சிபா ஆதித்தனார் அவர்களுக்கு மரியாதை செலுத்தினோம்.

சென்னையின் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய இந்த பகுதியில் ஆதித்தனாருக்கு சிலை வைக்க வேண்டும் என் உத்தரவிட்டவர் எம்ஜிஆர். ஜெயலலிதா, ஆதித்தனார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிமுக அலுவலக ஆவண வழக்கில் காவல்துறை யாரு வீட்டுக்கு சென்று இருக்க வேண்டும், அனைத்தும் பன்னீர்செல்வம் வீட்டில் தான் இருந்தது என்று ஜே.சி.டி.பிரபாகர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்கிறார். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஆவணங்களை கைப்பற்றுகின்றனர். இங்கே ஓபிஎஸ் மற்றும் திமுக கைகோர்த்து உள்ளனர்.

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது என்பது, அதிமுகவில் பன்னீர்செல்வத்திற்கு பதவியே இல்லை. நாடே இல்லாத நாட்டுக்கு 9 மந்திரிகள் என்று சொல்வதை போல தான் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.

திமுக மாவட்ட அமைப்புகளுக்கான மனு தாக்கலில் 700 பேர் கூட வரவில்லை. அதில் எத்தனை பேர் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் என்ற பட்டியலை சமூக நீதி பேசுபவர்கள் வெளியிட வேண்டும். ஜாதி ஆதிக்கம் அதிகம் மேல் ஓங்குவது திமுகவில் தான். ஊருக்கு தான் அவர்கள் உபதேசம் பண்ணுவார்கள்.

தலைவர்களின் சிலைக்கு உடனடியாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திமுக செய்து இருக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்றும் சொல்லும் இவர்கள், சமூக நிதி என்று சொல்லும் இவர்களின் ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது.

பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும் என்று சொல்ல கூடிய அளவுக்கு இரட்டை வேடதாரிகள் என்று சொன்னால் அது திமுக தான். நிறம் மாத்திக்கொள்ளும் பச்சோந்தியைப் போல் வல்லமை படைத்தவர்கள் திமுகவினர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆட்சி நிலைத்திருப்பதும், நிலைக்காமல் இருப்பதும் ஆட்சியாளர்கள் கையில் தான் உள்ளது - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.