நாளை தூத்துக்குடியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேரில் ஆலோசனை மேற்கொள்கிறார். நவம்பர் 15இல் மதுரையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
நவம்பர் 16இல் சிவகங்கையில் நடைபெறும் கூட்டத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிதி, அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, காணொலி கலந்தாய்வு மூலம் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தென் மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.