ETV Bharat / city

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை - அரசு விளக்கம்! - தனியார் மருத்துவமனைகள்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Jun 17, 2020, 2:24 PM IST

கரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்; கரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும்; கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் என வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் பெற ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? என அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதிலறிக்கையில், தமிழ்நாட்டில் 44 அரசு ஆய்வகங்கள், 33 தனியார் ஆய்வகங்கள் என 77 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி ஆறு லட்சத்து 55 ஆயிரத்து 257 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், 38 ஆயிரத்து 716 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் முதல் ஏழு ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயித்துள்ளதாகவும், தீவிரமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கரோனா சிகிச்சைக்கு 25 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்கி வைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக மாநில அரசு தான் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, விசாரணையை, ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.