ETV Bharat / city

கொடிவேரி கூட்டுக்குடிநீர்: அக்டோபரில் தொடங்கிவைக்கிறார் ஸ்டாலின் - கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார் ஸ்டாலின்

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கிவைக்கவுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்
கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்
author img

By

Published : Sep 9, 2021, 10:52 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று (செப். 9) காவல் துறை, தீயணைப்புத் துறை, மீட்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்றுவரும் கூட்டத்தொடரின்போது, பெருந்துறை தொகுதி கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து குடிநீர் விநியோகம் செய்ய அரசு ஆவனம் செய்யுமா எனப் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, "பெருந்துறை தொகுதி கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.

ஐந்து லட்சத்து 47 ஆயிரம் பேர் பயன்பெறக்கூடிய வகையில் 25 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும் வகையில், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கிவைக்கவுள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: 2000 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.