ETV Bharat / city

10ஆம் வகுப்புத் துணைத்தேர்வு முடிவுகள் நவ. 19இல் வெளியீடு

author img

By

Published : Nov 18, 2021, 12:03 PM IST

பத்தாம் வகுப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்

சென்னை: பத்தாம் வகுப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் செய்து ராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு செப்டம்பர் மாதம் தனித்தேர்வர்கள் உள்பட அனைவருக்கும் நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவு வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவுசெய்து இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அரசு உத்தரவின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு செப்டம்பர் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

எனவே மாற்றுத்திறனாளி தனித்து அவர்களும் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவுசெய்து மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

செப்டம்பரில் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.

மறுகூட்டல் தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வரும் தனித்தேர்வர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியம்- ஜீன் டிரேஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.