ETV Bharat / city

ஃபானி புயல் காரணமாக நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்-தெற்கு ரயில்வே! - தெற்கு ரயில்வே

சென்னை: ஃபானி புயல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவிற்கு சிறப்பு ரயில்கள் நாளை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஃபானி புயல் காரணமாக நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்-தெற்கு ரயில்வே!
author img

By

Published : May 5, 2019, 12:56 AM IST

ஃபானி புயல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த இரண்டு நாட்களாக அறிவித்து வந்தது. இதனால் பல்வேறு ரயில்சேவைகள் ரத்தானதால் பயணிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-ஷாலிமர் சிறப்பு ரயில் வண்டி எண்: 06166 நாளை மாலை 4.25 மணிக்கு புறப்படும். சிறப்பு ரயில் மே 6 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு கொல்கத்தா மாநிலம் ஷாலிமர் சென்று அடையும்.

சென்னை சென்ட்ரல்-புவனேஸ்வர் சிறப்பு ரயில் வண்டி எண்: 06164 சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மே 6 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்று அடையும்.

இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கப்படும். இந்த இரண்டு ரயில்கள் ஒருவழி மார்க்கமாக மட்டுமே இயக்கப்படும், என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஹவ்ராவிற்கு சிறப்பு ரயில் - ரயில்வே அறிவிப்பு 

பானி புயல் எதிரொலியாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு  விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த இரண்டு நாட்களாக அறிவித்து வந்தது.இதனால் பல்வேறு  ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டது .இதனால்  பயணிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ஹவ்ரா வரை இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது .

இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துளதாவது :

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் சிறப்பு ரயில் 

வண்டி எண் ;06166 -சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 4.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மே 6 -ம் தேதி இரவு 9.30 மணிக்கு ஷாலிமர் சென்று அடையும் .இந்த சிறப்பு ரயில் சூளூர்பேட்டை ,நாயடுபேட்டா ,கூடூர் ,நெல்லுர் ,ஓங்கோல் ,விஜயவாடா ,ஜெய்ப்பூர் ,சந்திராக்காச்சி ,ஷலீமார் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் .

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் -  புவனேஸ்வர் சிறப்பு ரயில் 

வண்டி எண் : 06164 சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மே 6 -ம் தேதி அன்று மதியம் 12.00 மணிக்கு புவனேஸ்வர் சென்று அடையும் .இந்த ரயில் சூளூர்பேட்டை , கூடூர் , நெல்லூர் ,ஓங்கோல் ,விஜயவாடா ,ராஜமுந்திரி ,விழியநகரம் ,குர்தா ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் .

இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கப்படுவதாக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் ஒருவழிமார்க்கமாக மட்டுமே இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.