ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு; ராமநாதபுரம் விரைந்த தனிப்படை - special squad went to ramnad to investigate minister mankiandan case

துணை நடிகை அளித்த புகாரினால் தலைமறைவாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்த ஆதாரங்களை திரட்ட தனிப்படை காவல் துறையினர் ராமநாதபுரம் சென்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு
author img

By

Published : Jun 2, 2021, 11:39 AM IST

சென்னை: கடந்த மே 28ஆம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை ஒருவர் காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் மணிகண்டன் உடன் அவர் ராமேஸ்வரத்தில் சொகுசு விடுதியில் தங்கியிருந்ததாகவும், தனக்கு கருத்தரிக்கமால் இருக்க ராமநாதபுரத்தில் இருந்து மணிகண்டன் மாத்திரை வாங்கி தந்ததாகவும் அந்நடிகை குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகள்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பின், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை குறித்து ஆதாரங்களை திரட்டவும், குடும்பத்தினர், அவரின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த தனிப்படை காவல் துறையினர் ராமநாதபுரம் விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கருணாநிதியின் பிறந்தநாளிலாவது அர்ச்சகர் கனவு நிறைவேறாதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.