சென்னை: பள்ளிகள் திறப்பதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பிருந்து பள்ளிகளை ஆய்வு செய்வதற்கும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாவட்டம் வாரியாக சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பின்படி செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.
அரசின் ஏற்பாடுகள்
பல லட்சம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவார்கள் என்பதால், கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் 100 விழுக்காடு கடைபிடிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே கண்காணிக்கவும், பள்ளி திறந்த பிறகு கரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யவும், மாவட்டம் வாரியாக சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான அரசு உத்தரவு ஒரு சில நாள்களில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: 'சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?'