வரும் ஜூன் 15 முதல் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது. இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ”பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக எந்தெந்த வழித்தடங்களில், எந்தெந்த பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் போன்ற விவரங்களை, அந்தந்த போக்குவரத்துக் கழக மண்டல மேலாண் இயக்குநர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பாக, சிறப்பு அலுவலரை நியமித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து வழித்தட விவரங்களை வருகின்ற 8ஆம் தேதி மாலைக்குள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். போக்குவரத்து வழித்தடங்கள் குறித்து தேர்வுக்கு முன்னரே மாணவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சூழ்நிலையைப் பொறுத்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி