ETV Bharat / city

முடிவில்லாமல் செல்லும் லாக் அப் மரணங்கள் முடிவுக்கு வருமா? - சென்னை செய்திகள்

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷின் சந்தேக மரணத்தில் தொடரும் குற்றச்சாட்டுகளை அடுத்து அவரின் இறப்பை மறைக்கவே ரூ.1 லட்சம் கொடுத்ததாக உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டியுள்ளார்.

லாக் அப்
லாக் அப்
author img

By

Published : Apr 27, 2022, 7:42 AM IST

சென்னை: சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் 'லாக் அப் டெத்’-ஐத் தொடர்ந்து, தற்போது சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்திலும் 'லாக் அப் மரணம்' ஒன்று நிகழ்ந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கடந்த 18ஆம் தேதி இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் மேற்கொண்ட வாகன சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இளைஞர் மரணம்: அதில் வந்தவர்களின் கைகளில் 10 கிராம் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி இருந்ததாகக் கூறி, சுரேஷ் மற்றும் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்து தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மறுநாள் 19ஆம் தேதி காலை கைது செய்யப்பட்ட விக்னேஷ் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விக்னேஷ் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவல்துறை மீது குற்றச்சாட்டு: இதனையடுத்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உயிரிழந்த விக்னேஷின் உடல் உடற்கூராய்பு செய்யப்பட்டு, அவரது சகோதரர் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இறப்பை மறைக்க மறைமுகமாக காவலர்கள் ரூ.1 லட்சம் கொடுத்ததாக உயிரிழந்த விக்னேஷின் சகோதரரான வினோத் தெரிவித்துள்ளார். இது குறித்து விக்னேஷின் சகோதரர் வினோத்திடம் பேசிய போது, கடந்த 18ஆம் தேதி இரவு தனது சகோதரர் விக்னேஷ் கைது செய்தவுடன் காவலர்கள் எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காமல் இறந்தவுடன் தகவல் தெரிவித்ததாக கூறினார்.

மறைமுகமாக ரூ.1 லட்சம் ஏன் கொடுக்கவேண்டும்? : மேலும் விக்னேஷின் உடலைப் பார்த்தபோது, முகத்தில் காயம் இருந்ததாகவும், அது போலீசார் தாக்கிய காயம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவலர்கள் மேன்ஷனில் அடைத்து வைத்து ஒருவரிடம் பேச முடியாத படி கொடுமைப்படுத்தியதாக வினோத் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுமட்டுமின்றி 'காவலர்கள் மறைமுகமாக தங்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கியதாகவும், அதாவது விக்னேஷ் வேலை பார்த்து வந்த குதிரை ஓட்டும் உரிமையாளரிடம் போலீசார் பணம் வழங்கி, அதை தங்களிடம் செலவுக்காகக் கொடுக்க வைத்ததுள்ளனர்' என்று வினோத் தெரிவித்தார். இது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நிகழக்கூடாது என வினோத் வேதனை தெரிவித்தார்.

டிஜிபி நடவடிக்கை: தமிழ்நாடு சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால், இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி-க்கு மாற்றி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும், விக்னேஷை கைது செய்த உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் மற்றும் விசாரணை செய்த காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்: மேலும், இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு, அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அதை நடைமுறையில் இல்லை என வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். அத்துடன் பொதுமக்களை தாக்குவதற்கும், துன்புறுத்துவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என்பதை முதலில் காவல்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும், சட்டத்தைக் கையிலெடுப்பதால் மட்டுமே 'லாக் அப் மரணங்கள்' நிகழுவதாக தெரிவித்துள்ளார்.

முடிவில்லாமல் செல்லும் லாக் அப் மரணங்கள்: இது மாதிரியான சம்பவங்கள் ஒரு சில காவலர்கள் வேலைப்பளு காரணமாகவும், மன அழுத்தம் ஏற்பட்டு செய்யும் தவறினாலும் மொத்த காவல்துறைக்கு கெட்டப்பெயர் ஏற்படுவதாகவும் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ராஜாராம் கூறுகிறார். மேலும், குற்ற வழக்குகளில் கைதானவர்களை தாக்காமல் விசாரணை செய்வது எப்படி என காவல் உயர் அலுவலர்கள்பயிற்சி வழங்க வேண்டும் என அவர் கூறினார். முடிவில்லாமல் செல்லும் லாக் அப் மரணங்களை முடிவுக்கு வருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: 'விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்... ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் லாக்-அப் மரணம் குறித்து விசாரிக்கப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.