ETV Bharat / city

தொடங்கிவிட்டதா மூன்றாம் உலகப் போர்? - அணைகள்

எரியும் குடிசையில் குளிர் காய்வது போல் இதனை பயன்படுத்திக்கொண்டு, தண்ணீர் கேன் போடுபவர்களோ விலையை சர்வசாதாரணமாக ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். தாகம் தீர்வதற்குக் கூட இன்று பணம் அவசியமாகிறது.

தண்ணீர்
author img

By

Published : Jun 14, 2019, 6:24 PM IST

Updated : Jun 15, 2019, 11:34 PM IST

தண்ணீர் உலகில் இன்றியமையாதது. உயிர்களுக்கு எது அத்தியாவசியமோ இல்லையோ தண்ணீர் அவசியமானது. ஆனால் தற்போது உலகமே தண்ணீர் பஞ்சத்தில் தலை தொங்கி நிற்கிறது. தமிழ்நாடு நிலைமை படுமோசம். பருவ மழை பொய்த்துப் போக, நிலத்தடி நீர் தொலைந்து போக மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் செல்கின்றனர். குடிக்க நீர் எடுக்க போவதற்குள் உடலில் இருக்கும் நீர் வற்றி போகிறது. தண்ணீர் குறித்து பயப்பட வேண்டாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க, எரியும் குடிசையில் குளிர் காய்வது போல் இதனை பயன்படுத்திக்கொண்டு, தண்ணீர் கேன் போடுபவர்களோ விலையை சர்வசாதாரணமாக ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். தாகம் தீர்வதற்குக் கூட இன்று பணம் அவசியமாகிறது. கொடுமையின் உச்சமாக ராஜஸ்தான் மாநிலம் பரஸ்ரம்புரா என்ற கிராமம் திகழ்கிறது.

தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர்

ஆம், கடும் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அங்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் பத்து நாட்களுக்கு ஒருமுறைதான். மற்ற நாட்களில் தண்ணீரை சிலர் திருடிச் செல்வதால் நீர் இருக்கும் கேன்களுக்கு பூட்டு போடும் அவலநிலை நிலவுகிறது. தங்கத்தைத் திருடிய காலம் போய் தண்ணீரை திருடும் காலம் வந்துவிட்டது எனவே உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்திய அளவில் மட்டுமில்லை... உலகளவில் தண்ணீர்ப் பிரச்னை எரிந்து கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் முற்றிலும் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய்விட்டது.

கேப்டவுன்
கேப் டவுன்

தண்ணீர்ப் பிரச்னைக்கு ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நம்மிடமும் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஏரிகள் எல்லாம் இப்போது அபார்ட்மெண்ட்டாக வளர்ந்து நிற்கின்றன. மழை வந்தால் நீர் எங்கும் செல்லவில்லை என சலித்துக்கொள்கிறோமே தவிர அதற்கான காரணம் என்ன என்பதைத் துளியும் ஆராயவில்லை. ஒவ்வொரு பெரு மழையின் போதும் வரும் வெள்ளத்தில் விழித்துக் கொண்டு ஏரியை தூர்வாரிக் கட்டடம் கட்டுகிறார்கள் என்று பேசுகிறோம் ஆனால் வெள்ளம் வடிந்த பிறகு நமது விழிப்பும் முடிந்து போகிறது.

பாபநாசம்
பாபநாசம்

தமிழ்நாட்டில் ஏராளமான அணைகள் இருக்கின்றன. அவைகளின் நிலையெல்லாம் தற்போது கண்ணீரை வரவைக்கிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரை தெரியும் அளவு நிர்வாணமாக காட்சியளித்தது. அதே போல் பருவ மழை பொய்த்ததால் மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. குறிப்பாக பாபநாசம் அணையில் தண்ணீர் வற்றியதால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதந்ததைக் கண்டபோது பதறியது.

செத்து கிடக்கும் மீன்கள்
செத்து கிடக்கும் மீன்கள்

விவசாயத்திற்குத்தான் நீர் போதவில்லை என்றால், தற்போது குடிப்பதற்கும் நீரின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது அனைவரையும் கலங்கடிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நிலையோ மேலும் பரிதாபம். தண்ணீர்ப் பிரச்னை காரணமாக பல்லாவரத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் குலுக்கல் முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி தண்ணீர் இல்லாததால் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளன. எங்கு இருந்துகொண்டு பணியாற்றினாலும் தண்ணீர் அவசியம்தானே. ஓஎம்ஆர் அபார்ட்மெண்ட்வாசிகள் எல்லாம் தற்போது இடத்தைக் காலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னையின் நிலை
சென்னையின் நிலை

இவ்வளவு பெரிய தண்ணீர்ப் பஞ்சத்திற்கு காரணம் நீர் மேலாண்மையில் நாம் விழிப்போடு செயல்படவில்லை என்பதே. அதுபோக, சென்னைக்குப் பிரதானமான அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. நிலத்தடி நீர் சர்வ சுத்தமாக குறைந்து போய்விட்டது. மழை நீர் சேகரிப்பு, நீரை வீணாக்கக் கூடாது, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பதெல்லாம் வெறும் போஸ்டர்களோடு முடிந்துவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சென்னையில்தான் இப்படி மற்ற மாவட்டங்களில் எப்படி என்று கவனித்தால் நிலைமை இதைவிட மோசமானதாக இருக்கிறது. நீர்ப் பஞ்சம் இவ்வளவு வராதபோதே வறண்ட பூமியாக கருதப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லாம் தண்ணீர் ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராமத்துக்குள் முதல் முறையாக காரை பார்க்கும் சிறுவர்கள் எப்படி பின்னால் ஓடுவார்களோ அதுபோல் மக்கள் தற்போது தண்ணீர் லாரியைக் கண்டதும் ஓடிவருகிறார்கள். கிராமத்தில் ஏராளமான குளங்கள் கிரிக்கெட் மைதானங்களாக மாறிப்போய் பல வருடங்களாகிவிட்டன.

வறண்ட பூமி
வறண்ட பூமி

குளங்களையோ, ஏரிகளையோ தூர்வார உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத சூழலில் இளைஞர்கள் தன்னார்வம் கொண்டு தூர்வார முன்னே வருகின்றனர். ஆனால் அவர்களால் எவ்வளவுதான் முடியும். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டிய அரசாங்கமோ கள்ள மவுனம் சாதித்து வருகிறது. நகரங்களில் மட்டுமே தலைகாட்டிய கேன் தண்ணியும், டேங்கர் லாரிகளும் கிராமங்களில் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டன.

வானம் பார்த்த பூமி
வானம் பார்த்த பூமி

கார் பார்க்கிங், அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் முன்னர் ஒரு ஏரியோ, ஆறோ இருந்திருக்கிறது. நாம் எதை கொடுக்கிறோமோ அதையே இயற்கை நமக்கு திருப்பி கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதில் இயற்கையை நாம் குறை சொல்லி பிரயோஜனமில்லை. தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக ஹோட்டல்களில் மதிய உணவை நிறுத்த ஆலோசித்து வருவதாக சென்னை ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்த நிலைமையின் விபரீதத்தை உணர்த்தும்.

அதுமட்டுமின்றி, ராமநாதபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வூர் கிராமம். குடிநீர் எடுப்பதற்காக செவ்வூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வைகை ஆற்றுப்படுகையில் தோன்றியுள்ள ஊற்று ஒன்றிலிருந்து நீர் எடுத்து வருகின்றனர் அந்த ஊர் பெண்கள். அகப்பை மூலம் சிறிது சிறிதாக ஊற்று நீரைக் குடத்தில் நிரப்புகின்றனர். ஒரு குடம் நிரப்புவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. ஆதிகாலத்தில் வாழ்ந்தவர்கள்கூட இப்படி நீருக்கு அலைந்திருக்கமாட்டார்கள். 2020-21ஆம் ஆண்டில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும் என்று நிதி ஆயோக் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

ராமநாதபுரத்து நிலை
ராமநாதபுரத்து நிலை

மனிதர்களாவது அடித்து பிடித்து தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் விலங்குகள், பறவைகளின் நிலைமையோ அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள திவாஸ் நகரில் ஜோஷி பாபா என்ற வனப்பகுதியில் நீர் வறட்சியின் காரணமாக ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தால் குரங்குகள் செத்து மடிந்துள்ளன. இந்த பிரபஞ்சத்தை உயிர்களே அற்ற வெட்டவெளியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் எப்போதுதான் புரிந்து கொள்வோம். நாகரீகங்கள் வளர்ந்து, ஸ்மார்ட் போன்கள் மூலம் உள்ளங்கைகளில் உலகைக் கொண்டு வந்து என்ன பயன்... உலகில் வாழ தண்ணீர் வேண்டும்தானே.

தண்ணீருக்காக குரங்குகள்நீரைத் தேடும் குரங்குகள்

கத்தி திரைப்படத்தில் தண்ணீர் இல்லாமல் நகரம் எப்படி அல்லல்படுகிறது என்று காட்டப்பட்ட காட்சி நம் கண் முன்னே தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாமும் அதில் கதாபாத்திரங்களாக இருந்து வருகிறோம். இனியும் மக்களும், அரசும் விழித்துக் கொள்ளாமல் அசட்டுத்தனமாக இருந்தோம் என்றால் ஒருவரை ஒருவர் அடித்து அடுத்தவரின் ரத்தத்தை குடிக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாகும்.

தண்ணீர் பஞ்சம்
தண்ணீர் பஞ்சம்

இனி ஒரு உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர். ஆம், தற்போது நடப்பவைகளை பார்த்தால் மூன்றாம் உலகப்போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. உடனடியாக உலகம் விழித்து மூன்றாம் உலகப்போர் மூளுவதை தடுக்க வேண்டும். ஏனெனில் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் முன்னரே பாடி வைத்திருக்கிறார்.

Intro:Body:

water problem 

Conclusion:
Last Updated : Jun 15, 2019, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.