ETV Bharat / city

சேது ஒரு தனிப்பெரும் காதலன்....#20YearsofSethu

எதார்த்தத்தை, தனது இயல்பை நோகடிக்காத, இழக்க செய்யாத காதலும், காதலியும் அமைவது வரம். அதுதான் சேதுவுக்கு அமைந்தது.

சேது
சேது
author img

By

Published : Dec 10, 2019, 7:32 PM IST

Updated : Dec 10, 2019, 9:03 PM IST

காதல் என்றால் மென்மை. காதல் செய்பவர்கள் மென்மையானவர்கள். தங்களது காதலை மிக மிக மென்மையாக வெளிப்படுத்துவார்கள். காதல் அவர்களை மாற்றும். இப்படி தமிழ் சினிமாவில் இருந்த காதலையும், அதற்கான இலக்கணங்களையும் இருவர் வந்து உடைத்தனர்.

தமிழ் சினிமா இன்றுவரை தலை மேல் தூக்கிக் கொண்டாடும், தமிழ் சினிமாவை தோள் மேல் தாங்கி கொண்டிருப்பவர்களில் இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் ஆகிய இருவர் முக்கியமானவர்கள்.

பாலா, விக்ரம்
பாலா, விக்ரம்

கோலிவுட்டில் இலக்கணங்களை உடைக்கும் அதிசயம் எப்போதாவது பிறக்கும். அந்த அதிசயத்தை 1999ஆம் ஆண்டு பிரசவித்தவர் பாலா. அந்த அதிசயத்திற்கு உயிர் கொடுத்தவர் விக்ரம்.

பாலாவின் கல்லூரி காலம் குறித்து அவரிடம் ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டபோது அவர் இப்படி சொன்னார், '' மறக்கவே நினைக்கிறேன் ''. அவரின் கல்லூரி காலம் அப்படித்தான் இருந்தது. திக்கற்று திசையற்று அவர் திரிந்த கல்லூரி நாட்கள் அது. பாலாவின் கல்லூரி காலத்திற்கும், சேது திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழலாம். இருக்கிறது.

சேதுவின் கல்லூரி காலம் பெரும்பாலும் பாலாவின் கல்லூரி நாட்களின் பிரதிபலிப்பு. சேதுவுக்கு முன் தமிழ் சினிமாவில் கல்லூரி காட்சிகள் வந்திருக்கின்றன. ஆனால் இருப்பதை அப்படியே ராவாக எந்தக் கலப்படமும் இல்லாமல் ரசிகனுக்கு சேது மூலம் ஊற்றிக் கொடுத்தார் பாலா.

சேது
சேது

சேது ஒன்றும் அரிதிலும் அரிதான கதை இல்லைதான். வழக்கமான காதல் கதைதான். ஆனால், கரடு முரடானவன் காதலில் விழுந்தால், அந்த காதலிலும் தனது யதார்த்தத்தை தொலைக்காமல் அவன் இருந்தால்? இப்படி கேள்விகளை வைத்துக்கொண்டு பாலா அந்தப் படத்தை உருவாக்கினார்.

ஏராளமான தடைகளை, இரண்டு கதாநாயகர்களைக் கடந்து தன்னை போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருப்பவரைத் தேடி கடைசியாக விக்ரமிடம் வந்தார் பாலா.

சீயான் சேது
சீயான் சேது

அப்போது பாலாவிடம் விக்ரம் சொன்ன வார்த்தைகள், '' நாம ஜெயிக்கணும் பாலா. பழிவாங்குறதுனா அடிக்கிறது, அவமானப்படுத்தறது மட்டுமல்ல... அவங்க கண்ணு முன்னால நாம ஜெயிக்கணும். சேர்ந்து ஜெயிப்போம் பாலா ''.

விக்ரமின் இந்த வார்த்தைகள் மிக சாதாரணமாகத் தெரியலாம். முக்கியமாக தமிழ் சினிமாவில் சேர்ந்து பயணிப்போம் என்ற வார்த்தை வருவதே அரிதிலும் அரிது. சேர்ந்து ஜெயிப்போம் என்று விக்ரம் சொன்ன வார்த்தைகள், சோர்ந்து போயிருந்த பாலாவுக்கு புது தெம்பைக் கொடுத்தது.

சீயான்
சீயான்

நம்மில் பெரும்பாலானோர் கல்லூரி காலத்தையும், கல்லூரி காதலையும் கடந்து வந்திருப்போம். அந்த இரு விஷயத்தையும் பாலா எந்தவித சமரசமுமின்றி ரசிகர்களுக்குப் படைத்தார்.

'நம்ம சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்ட தம்பிமாரே ' என்று பாடல் தொடங்கி தேர்தலில் விக்ரம் வென்ற பிறகு, ' கான கருங்குயிலே' என்று இளையராஜா இறங்கி அடித்து ரசிகர்களின் கொண்டாட்டத்தை எழுப்பியிருப்பார். அங்கிருந்து படம் முடியும் வரை விக்ரம் செய்திருந்த ஒவ்வொரு விஷயமும் அப்படி இருக்கும்.

சேதுவின் நண்பர்கள்
சேதுவின் நண்பர்கள்

தாய், தந்தையை இழந்தவனுக்கு அண்ணன் இருந்தால் அந்த அண்ணன் தாயுமானவனாக இருக்க வேண்டும். ஆனால், அந்த அண்ணனுக்கு திருமணம் முடிந்துவிட்டால் அவன் தனது தம்பியிடம் தந்தை ஸ்தானத்திற்கு நகர்ந்து, தாய் ஸ்தானத்திற்கு அவனது மனைவி வரவேண்டும்.

சேதுவின் அண்ணி அப்படிப்பட்டவள். '' எதா இருந்தாலும் அவன் சாப்பிட்டு முடிச்ச பிறகு பேசுங்க '' என தனது கணவனான சிவகுமாரிடம் அவள் பேசுவதாகட்டும், சேதுவின் காதலி வீட்டுக்கு வரும்போது அரைகுறை ஆங்கிலத்தில் பேசும் சேதுவை ரசிப்பதாகட்டும் அந்த அண்ணி சேதுவின் இன்னொரு தாய்.

சேதுவின் அண்ணி
சேதுவின் அண்ணி

அபித குஜலாம்பாலை சேது கண்ட பிறகு, அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அவனது நண்பன், '' மாட்டிக்கிட்டியே சீயான் மாட்டிக்கிட்டியே '' என்று ராகத்தில் சொல்வதெல்லாம் அதகளமான சீன்.

சேது
சேது

இப்போது அர்ஜுன் ரெட்டி படம் குறித்து அனைவரும் சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழைப் பொறுத்தவரை 20 வருடங்களுக்கு முன்னரே 'சேது' மூலம் அர்ஜுன் ரெட்டியை பாலா கொண்டு வந்து விட்டார். அதனால்தான் தனது மகனையும் சேது போலவே ஒரு கதைக்களத்தில், சேதுவை இயக்கிய இயக்குநர் மூலமே அறிமுகப்படுத்த நினைத்தார் விக்ரம். ஆனால், அது நடக்கவில்லை. இது யாருக்கு ஏமாற்றமோ இல்லையோ நிச்சயம் விக்ரமுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்.

முக்கியமாக சேதுவைப் பற்றி பேசும்போது ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். அது அபிதாவிடம் சேது, தனது காதலை வெளிப்படுத்தும் இடம். தமிழ் சினிமாவில் காதலிப்பவர் தனது காதலை உருகி, மருகி வெளிப்படுத்திக் கொண்டிருந்த சூழலில் சேது மட்டும்தான் தனது காதலை யதார்த்தம் குழையாமல், சினிமாத்தனம் இல்லாமல், மனதில் இருப்பதை அப்படியே சொல்லியிருப்பான்.

சேது, அபிதா
சேது, அபிதா

சேதுவுக்கு நடந்த கோர சம்பவத்தால் அவன் ஏர்வாடியில் அனுமதிக்கப்பட்ட பிறகு விக்ரமின் நடிப்பு இன்றுவரை ஒரு அகராதி. குறிப்பாக, சேதுவை ஏர்வாடியில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர் கூற அதற்கு சிவகுமாரும் ஒத்துக்கொள்ள அப்போது சேதுவின் நண்பன் ஸ்ரீமன் '' உன்னால முடியலனா பொத்திட்டு போ நாங்க பார்த்துக்குறோம்'' எனக் கோபத்தில் வெடித்து பேசுவதை இப்போது பார்த்தாலும் ஏதோ செய்யும்.

சேதுவின் நண்பன்
சேதுவின் நண்பன்

ஏர்வாடியில் விக்ரம் அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சிகளில், ரத்னவேலுவின் கேமராவும், இளையராஜாவின் இசையும் இனம் புரியாத வலியை ரசிகர்களுக்கு கடத்தியது. அதிலும், ' எங்கே செல்லும் இந்த பாதை’ பாடலும், அதில் இளையராஜாவின் குரலும் தமிழ் சினிமா இன்னும் எங்கே சென்றாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சேது திடீரென குணமடைந்திருக்கும்போது அவனைக் காண அபிதா வந்துவிட்டு செல்வதைக் கண்டு துடிக்கும்போது விக்ரம் நடித்திருக்கும் நடிப்பு சொல்லும் அவர் யார் என்பதை. ஒருவழியாக ஏர்வாடி மடத்திலிருந்து தப்பித்து அபிதாவைத் தேடி வந்தபோது, அவள் தற்கொலை செய்து இறந்து கிடப்பதைக் கண்டு, தெரிந்தே ஏர்வாடி வேனில் ஏறி செல்வார், சேது.

சேது
சேது

காதலின் உச்ச நிலை பித்து பிடித்தல். காதலி உயிருடன் இருக்கும்போது பிடிக்கும் பித்து ஆன்மாவை குளிர வைப்பது. ஆனால் காதலி எதிர்பார்க்காத நேரத்தில் இறக்கும்போது பிடிக்கும் பித்து ஆன்மாவை உறையவைப்பது. எதார்த்தத்தை நோகடிக்காத, இழக்க செய்யாத காதலும், காதலியும் அமைவது வரம். அதுதான் சேதுவுக்கு அமைந்தது. ஆனால் நிலைக்கவில்லை. அபிதா இல்லாமல் மனநலம் நன்றாக இருப்பவர்களுக்கு மத்தியில் இருந்து மற்றவர்களை நோகடிப்பதைவிட மனநலம் சரியில்லாதவர்கள் மத்தியிலேயே இருக்கலாம் என்று மீண்டும் ஏர்வாடிக்கே சென்ற சேது ஒரு தனிப்பெரும் காதலன்.

Intro:Body:

sethu

Conclusion:
Last Updated : Dec 10, 2019, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.