சென்னை: கடந்த 2018ம் ஆண்டு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் ஆகியோர் முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் புகார்களுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கூறி, ஊழல் தடுப்புச்சட்டம், கூட்டுச்சதி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்பட 6 பேர் மீதும், அவர்களுடன் தொடர்புடைய 11 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சோதனை
இந்நிலையில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று (ஆக. 10) சோதனை நடத்தினர்.
சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் சோதனை நடத்தினர்.
பணம் பறிமுதல்
சோதனையில் 13 லட்சத்து,8 ஆயிரத்து,500 ரூபாய் பணமும், டெண்டர் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கோடி மதிப்பிலான வைப்புத்தொகை ஆவணம், நிலம் பத்திரப்பதிவு ஆவணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு - லாக்கர் சாவியை எடுத்துச்சென்ற போலீசார்'