சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக மீண்டும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது. நாசர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று (ஜுன் 2) நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாசர், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார். மேலும் நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பாக அக்கறையுடன் ரஜினி கேட்டறிந்தார். மேலும் சங்கத்திற்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினார் என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு