சென்னை: சென்னை செம்பியும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாநகராட்சி சுடுகாட்டில், அடையாளம் தெரியாத நபரின் முகம் சிதைக்கப்பட்டு இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வில், அவர் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஆப்ப கார்த்திக்(31)என்பது தெரியவந்தது. மேலும், இது குறித்து தீவிர விசாரனையில் ஈடுபட்ட காவல் துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆப்ப கார்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான காட்டன் மோஹன் என்பவரும் சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஆப்ப கார்த்திக் காட்டன் மோஹனை தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் காட்டன் மோஹனின் மகனான மாதவனுக்கு தெரியவர, அவர் ஆப்ப கார்த்திக் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மாதவன் தன் நண்பர்கள் சில பேரை உடன் வைத்துக் கொண்டு ஆப்ப கார்த்திக்கை சுடுகாட்டிற்கு மது அருந்த வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த ஆப்ப கார்த்திக்கை நன்றாக மது குடிக்க வைத்து விட்டு மாதவன் தன் நண்பர்களுடன் தாக்கியுள்ளார்.
இதில், ஆப்ப கார்த்திக் முகம் சிதைவடைந்து மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்று உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: மதுரையில் மவுசு குறையாத மு.க.அழகிரி - ஆதரவாளரின் இல்லவிழாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு!