சென்னை: மதுரை மாவட்டத்தில் ஒரு வயது குழந்தையை விற்றதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ரிசர்வ்லைன் குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ்ட் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டுவந்தது. இந்தக் காப்பகத்திலிருந்த ஒரு வயது குழந்தை விற்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாகத் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களை உடனடியாக ஆய்வுசெய்ய வேண்டும் எனவும், இந்த உத்தரவின் அடிப்படையில் இரண்டு வார காலத்திற்குள் அனைத்து குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் உரிமம் பெற்றுள்ளனவா என்பது குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியாளர்கள் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய மருத்துவர் தினம்- யார் இந்த பி.சி ராய்!