ETV Bharat / city

சென்னையில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - gold smuggling in chennai

சென்னை விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1.55 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

smuggled-gold-worth-of-68-lakh-rupees
smuggled-gold-worth-of-68-lakh-rupees
author img

By

Published : Dec 23, 2021, 7:05 PM IST

சென்னை: இலங்கையிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு இன்று(டிச.23) ஏா் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானப் பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது, இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டனர்.

இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள், அவர்களிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது உள்ளாடைகளுக்குள் மறைந்து எடுத்துவந்த 1.55 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் சிக்கியது.

அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், 6 பேரையும் கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்டவர்கள் சென்னை, சிவகங்கையை சோ்ந்தவர்கள் என்பதும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ரூ.68 லட்சம் மதிப்பு கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.