ETV Bharat / city

திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - பள்ளி மேலாண்மைக் குழு துவக்க விழா

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவது தான் தமிழ்நாடு அரசின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மேலாண்மைக் குழு துவக்க விழாவில் உறுதி அளித்துள்ளார்.

திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்!- முதலமைச்சர்  மு க ஸ்டாலின்

author img

By

Published : Apr 19, 2022, 12:39 PM IST

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் , 'நம் பள்ளி நம் பெருமை ' எனும் விழிப்புணர்வு பிரசார வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தும், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு ' நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

லேடி வெலிங்டன் பள்ளியின் , பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட லதா என்பவருக்குச் சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான உறுதிமொழியைச் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வாசிக்க, உறுப்பினர்கள் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பள்ளிப் பருவம் என்பது திரும்பக் கிடைக்காத மகிழ்ச்சியான காலம் , இங்கிருக்கும் மாணவர்களை ஏக்கத்துடன் வாழ்த்துகிறேன். நான் ஏக்கத்துடன் வாழ்த்துவதாகக் கூற காரணம் , இந்த பருவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி , கொண்டாட்டம் வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது. இந்தப் பருவத்தை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும். இப்பள்ளி சுப்புலட்சுமி அம்மையாரால் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டு 1914 ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளியாக இருந்தது.

திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்: பின்பு 1921 கட்டடம் கட்டப்பட்டு லேடி வெலிங்டன் உயர்நிலைப் பள்ளியாகப் பெயர் மாற்றப்பட்டது. 1922 டிசம்பர் 19இல் இப்பள்ளி தொடங்கியது. 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி' என்ற குறளை நினைவூட்டுகிறேன். திருட முடியாத ஒரே சொத்து கல்விதான். அதனால்தான் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்விக்கு மிக மிக மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

'உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல அவர்கள் உங்கள் வழியாக வாழ்கிறார்கள் வருகிறார்கள். ஆனால் உங்களிலிருந்து வரவில்லை அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் சிந்தனையை அல்ல அவர்களை உங்களைப் போல் ஆக்க நினைக்காதீர்கள் என்ற கலீல் ஜிப்ரான் வரிகளை நினைவூட்டுகிறேன்.

பெற்றோர் குழந்தைகளிடம் தங்களது கனவுகளைத் திணிக்காதீர் .புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள் என்றார் அப்துல் ரகுமான். சமூக முன்னேற்றத்தின் திறவுகோல் மாணவர்களுக்கான கல்விதான். பள்ளிக் கல்வியில் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

இந்த நிதி நிலை அறிக்கையில் 36,892 கோடி பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற வேண்டும் , தரமான , சமமான கல்வி குழந்தைகளுக்குக் கிடக்க வேண்டும் என்பதால்தான் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், ’தற்போது மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவது தான் தமிழ்நாடு அரசின் நோக்கம். அனைத்து வகை வன்முறைகளிலிருந்தும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அனைத்து குழந்தைகளும் பிற குழந்தைகளுடன் அன்பு பாராட்ட வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம்:அனைத்து குழந்தைகளுக்கும் தரமான , சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதால் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன எனவும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம் ஆகும். பள்ளிக் கல்வியில் இந்தியாவில் முன்மாதிரி மாநிலம் தமிழகம் எனப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டு , மாணவர்களின் பெற்றோர் , ஆசிரியர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய தலா 20 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,557 பள்ளிகளிலும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'நம் நாடு நம் பெருமை ' என்று மாற , 'நம் பள்ளி நம் பெருமை ' என்பது முக்கியம் " எனப் பேசினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 8,228 பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன: பள்ளிக் கல்வித் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.