சென்னை: சென்னை, லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற “நம் பள்ளி நம் பெருமை” பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவராக தேர்வுச் செய்யப்பட்ட லதா சுரேஷ் கூறும்போது, பள்ளியின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட முடியும். மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் போது பெற்றோரும் மாதம் ஒரு முறை வகுப்பறையில் கவனிக்கும் வகையில் செயல்படுத்த முடியுமா?என்பதையும் ஆய்வு செய்து வருகிறேன்.
கரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளதால், மாணவர்களின் பெற்றோருடன் இணைந்து கல்வியை சிறப்பாக அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
லேடி வில்லிங்டன் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலாராணி கூறும்போது, பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். இந்த குழுவில் மாணவர்களின் பெற்றோர்கள் 15 பேரும், கல்வியாளர், பள்ளியின் ஆசிரியர்கள். தன்னார்வலர் என 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்