ETV Bharat / city

கண்ணாம்பூச்சி விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

author img

By

Published : Feb 14, 2020, 8:36 AM IST

சென்னை: ஆறு வயது சிறுவன் கண்ணாம்பூச்சி விளையாடியபோது கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Six year child died near Avadi
Six year child died near Avadi

சென்னையை அடுத்துள்ள ஆவடியில் அன்பழகன் தெருவில் வசித்துவருபவர் காந்தி. இவருக்கு வள்ளி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகளும் ஆறு வயதில் சுமுகன், சுதேகன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இரட்டையர்களான இருவரும் அருகே உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே அவர்கள் கண்ணாம்பூச்சி விளையாடி உள்ளனர். அப்போது ஒளிந்துகொள்ளச் சென்ற சுமுகன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் காணாமல்போன சிறுவனை வீடு, தெரு எனப் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

பின்னர் இறுதியாக இரவு ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சுமுகன் வீட்டின் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.

அதில் சிறுவன் சுமுகன் வீட்டை விட்டு வெளியே செல்லாதது உறுதியானது. இதையடுத்து வீட்டைச் சுற்றி ஆய்வுசெய்த காவல் துறையினர் வீட்டில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

கண்ணாம்பூச்சி விளையாட சென்ற சிறுவன் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

அதன்படி உடனடியாக கழிவுநீர் வாகனத்தை வரவழைத்து கழிவுநீரை அகற்றினர். அப்போது சிறுவன் சுமுகன் தொட்டியில் சடலமாக கிடந்தான். இதையடுத்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆறு வயது சிறுவன் கண்ணாம்பூச்சி விளையாடியபோது கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுவனை காலணியை கழற்றுமாறு கூறிய விவகாரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.