ETV Bharat / city

போதை மாத்திரை விற்பனை: 6 பேர் கைது

author img

By

Published : Dec 31, 2021, 12:33 PM IST

சென்னை புறநகர்ப் பகுதியில் போதை மாத்திரை எனக் கூறி வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

போதை மாத்திரை விற்பனை செய்ததாக கைது
கைது செய்யப்படவர்கள்

சென்னை: கிண்டி அடுத்த பரங்கிமலை, ஆலந்தூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக, புனித தோமையார் மலை காவல் துணை ஆணையர் அருண் பாலகோபாலனுக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில் அருண் பாலகோபாலன் உத்தரவின்பேரில், ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியபோது, வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாகப் பயன்படுத்திவருவது தெரியவந்தது.

பிடிபட்ட ஆறு பேர்

தனிப்படை காவல் துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகே சில நபர்கள் கைகளில் பார்சல் ஒன்றை வைத்துக்கொண்டு சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்தனர்.

அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (25), பரங்கிமலையைச் சேர்ந்த அருண் (21), நவீன் ராஜ் (22), கெவின் பாபு (23), ஜெகநாதன் (18), வளசரவாக்கத்தைச் சேர்ந்த அருண் சேகர் (22) எனத் தெரியவந்தது.

ஆறு பேரையும் கைதுசெய்து புனித தோமையார் மலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், இவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் பதிவுசெய்தும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள வனிஷ், சீனு ஆகிய இருவரிடம் இருந்து மாத்திரைகள் வாங்கியும், போதை மாத்திரைகள் எனக் கூறி பரங்கிமலை, ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதியில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

பறிமுதல்

மேலும் விசாரணையில் பள்ளி மாணவர்களிடம் இந்த மாத்திரைகளைக் கொடுத்து புறநகர்ப் பகுதிகளில் விற்பனை செய்துவருவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஏழு அட்டைப்பெட்டியில் 700 மாத்திரைகள், ஆறு செல்போன்கள், நான்கு இருசக்கர வாகனங்கள், 20 ஆயிரம் ரூபாய் அவற்றைப் பறிமுதல்செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: mall roof collapse: கனமழை: இடிந்து விழுந்த பிரபல மாலின் ஃபால் சீலிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.