சென்னை: கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் மாணவிகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று ஆஜாராகும்படி குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
4 பேர் மிஸ்ஸிங்
இந்நிலையில், இன்று ஆணையத்தின் முன் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. அப்பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் உள்பட 4 பேர் மட்டும் ஆஜர் ஆகினர்.
சிவசங்கர் பாபா மீது சமூக வலைத்தளத்தில் முன்னாள் மாணவி பாலியல் புகார் வைத்தது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாலியல் புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆஜராகவில்லை.