ETV Bharat / city

சிவசங்கர் பாபா வழக்கு: இப்போதைக்கு குற்றப்பத்திரிக்கை வேண்டாம் - உயர் நீதிமன்றம் - சிவசங்கர் பாபா வழக்கு

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபா வழக்கு
சிவசங்கர் பாபா வழக்கு
author img

By

Published : Mar 21, 2022, 10:46 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு, தற்போது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2012 ஏப்ரல், மே மாதத்தில் பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா, ஆசிரியை தீபா, பக்தர் கருணாம்பிகை, பாரதி, நீரஜ் ஆகியோர் மீது மூன்றாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா, தீபா உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 2021ஆம் ஆண்டு புகாரை பெற்றுள்ளனர். மேலும், அதற்காக பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தவறு.

புகாரில் அளித்த பெண்ணுடன் குற்றஞ்சாட்டிற்கு உள்ளானவர்களின் தொடர்பு இல்லாத நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதனையடுத்து, மனு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால், இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார். இதனிடையே சிவசங்கர் பாபாவிற்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 23ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: "கடைகளுக்குச் சீல் வைப்பு" - தமிழ்நாடு அரசு அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.