சென்னை: சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், தனது தொகுதிக்கு உள்பட்ட திருவாலங்காடு ஒன்றிய காவேரிராசபுரம் கிராமத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க அரசு ஆவனம் செய்யுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர், “தொழிற் பூங்கா அமைக்க மின்சாரம் தண்ணீர் உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு , கும்மிடிப்பூண்டி தேர்வாய் கண்டிகை , மப்பேடு, உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்பூங்காக்கள் உள்ளன.
திருவாலங்காடு ஒன்றிய காவேரிராசபுரம் கிராமத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.