சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறையால், சித்த மருத்துவ ஆசிரியர்களுக்கான 'சித்த மருத்துவ ஆய்வு முறைகள்' குறித்த மருத்துவத் தொடர் கல்வி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தலைப்புகள், ஆராய்ச்சி செய்யும் முறைகள் குறித்து மருத்துவ ஆய்வுக்கான திட்ட அறிக்கை தயாரித்தல், பல்வேறு வகையிலான ஆராய்ச்சி முறைகள், ஆய்வுக்கான தரவுகளைத் தேடிச் சேகரித்தல், புள்ளியியல் பகுப்பாய்வு, ஆய்வுக்கான நிதியுதவி பெற விண்ணப்பித்தல், ஆய்வறிக்கை தயாரித்துச் சமர்ப்பித்தல் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மரு.சுதா சேஷய்யன், 'தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சித்தர்களின் கண்டுபிடிப்பினால், சித்த மருத்துவம் ஓங்கி வருகிறது.
இருப்பினும் தேவநேயப்பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் போற்றியும் சித்த மருத்துவத்தைக் கையாள்வதில் சற்று தடை இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
'கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத் தீர்வு'
சித்தர்களின் மருத்துவம், விஞ்ஞான வழியாக வருவதற்கு முன்னரே பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், சித்த மருத்துவத்தை அணுகும்முறை மக்களிடையே குறைவாகவே உள்ளது.
அகத்தியர், திருமூலர், தேரையர் போன்ற சித்தர்கள் எல்லாம் மருத்துவம் குறித்து வழிமுறைகளை அறிய, கேள்விகள் கேட்டு விஞ்ஞானத்தின் முன்பாகவே தங்களது அறிவின் மூலம் தெரிவித்துள்ளனர்.
மனிதனின் நோய்கள் கண்டுபிடிப்பதற்கான எல்லா மருத்துவத்தின் அணுகுமுறையும் ஒன்றாகவே உள்ளது. பொதுவாக மருத்துவத்தில் நாம் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாக்கு, மொழி, நிறம், விழி, ஸ்பரசம், நீர், நாடி, மலம் போன்ற எண் வகை விஷயங்களைக் கேட்டறிந்து அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
கிராமங்களில், கிராம சித்த வைத்தியர்கள் மூலம் சிறப்பான அணுகுமுறையில், நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. தற்போது உலகையே அச்சுறுத்திவரும் (கோவிட்-19) கரோனா தொற்று நோய்க்குச் சித்த மருத்துவத்தின் மூலம் ஒரு பெரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.
எனவே, உலகெங்கும் புகழ் பெற்றுவரும், இந்த சித்த முறை மருத்துவத்தை இந்த வேளையில், அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.
மலேசிய போன்ற வெளிநாடுகளில், இந்த சித்த முறைக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது' என்று கூறினார்.
இதையும் படிங்க: 8 மாணவர்கள் மதமாற்றம்? - கிறிஸ்தவப் பள்ளி மீது இந்து அமைப்பினர் தாக்குதல்