சென்னை: ஈக்காட்டுதாங்கல் நந்தி வர்மன் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று தி நகர் தாமோதரன் தெருவில் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தபோது, ஸ்மார்ட் சிட்டி பிளாட்பாரத்தில் தனியார் துணிக்கடைக்கு சொந்தமான விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டிருப்பதை கண்டார்.
பின்னர் விளம்பர பலகையை அகற்றக்கோரி கடையின் உரிமையாளர் அப்துல் கரீமிடம் ஊழியர் கண்ணன் தெரிவித்துள்ளார். அதற்கு மதுபோதையில் இருந்த அப்துல் கரீம் விளம்பர பலகையை அகற்ற முடியாது என தெரிவித்து மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் மாநகராட்சி ஊழியரான கண்ணனை ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது. . காயமடைந்த கண்ணன் இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் அப்துல் கரீம் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்