ETV Bharat / city

பாஜகவில் இணையும் சிவாஜி மகன்! - சிவாஜி மகன் ராம்குமார்

சென்னை: அதிகாரப்பூர்வமாக நாளை பாஜகவில் இணையவுள்ளதாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

son
son
author img

By

Published : Feb 10, 2021, 3:16 PM IST

சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் முருகனை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், “நாளை பாஜகவில் இணைய இருக்கிறேன். எனது தந்தை சிவாஜி கணேசன் காங்கிரசில் இருந்தாலும், நான் மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணையவுள்ளேன்” என்றார்.

நடிகர் பிரபுவும் பாஜகவில் இணையும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ராம்குமார், அவர் நடிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

காமராஜரின் தீவிர தொண்டரான சிவாஜி கணேசன் அவர் மீது கொண்ட பற்றால் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியை உருவாக்கினார். அக்கட்சியின் பொருளாளராக ராம்குமார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இது சீமான் சொந்தங்களின் விழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.