சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். செப்டம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரி கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோர மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபத்தான சூழலை கையாளுவது குறித்து ஒத்திகை நடத்திய தீயணைப்புத் துறை வீரர்கள்!