ETV Bharat / city

இ-பாஸ் முறைகேடு - அமைச்சர் எச்சரிக்கை! - கரோனா

சென்னை: இ-பாஸ் பெற்றுத் தருவதாக முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

udhayakumar
udhayakumar
author img

By

Published : Aug 3, 2020, 1:41 PM IST

சென்னையில் திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று(ஆகஸ்ட் 3) பார்வையிட்டார். அங்குள்ள களப்பணியாளர்களுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், 'தொழில்துறை நிறுவனங்கள் 75% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. உணவகங்கள், வழிபாட்டு இடங்கள் போன்றவற்றிற்கும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் தொற்றின் வீரியம் குறையும் போது, மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்.

வெளியூர் செல்ல நியாயமான, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும். இ-பாஸ் பெற்றுத் தருவதாக யாரேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இ-பாஸ் முறைகேடு - அமைச்சர் எச்சரிக்கை!

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.