சென்னை: தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 1991ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்த ஏழு அலுவலர்கள், முதன்மை செயலர் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
அலுவலர்களின் விவரம்
அதன்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக சேர்மன் டி.கே.ராமச்சந்திரன், பிரதம அலுவலக பிரிவில் உள்ள எஸ்.கோபாலகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை செயலர் முருகானந்தம் ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் திருப்பூர் வட்டார வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சந்திரகாந்த் பி காம்ப்ளே, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அவரவர் பதவிகள் கூடுதல் தலைமைச்செயலர் அந்தஸ்துக்கு தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நில அபகரிப்பு வழக்கு: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவு