மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கரோனா பரவல் கடந்த 10 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தில் இருந்து 19 ஆயிரமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்களிடம் கரோனோவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதை கண்டறிய "Sero survey" எனப்படும் குருதி சார் அளவீடு ஆய்வு தொடங்க சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே ICMR வழிகாட்டு நெறிமுறைகள்படி மாநகராட்சி சார்பில் இரண்டு கட்டங்களாக SERO சர்வே சென்னையில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
கரோனா இரண்டாம் அலையொட்டி, தற்போது ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி எந்தெந்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கண்டறிந்து நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை அங்கு தீவிரப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு
சென்னை: கரோனோ பரவல் குறைந்துள்ள நிலையில், சென்னையில் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.