ETV Bharat / city

கு.க.செல்வம் மருமகன் மரண வழக்கு - குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக காவல்துறை தகவல் - கு.க.செல்வம்

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வத்தின் மருமகன் மரணம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

death
death
author img

By

Published : Oct 13, 2020, 5:44 PM IST

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான கு.க.செல்வம். இவரது மருமகன் துளசிராமன் (50), கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் பூந்தமல்லியை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முந்நாள் இரவு, தனது மகளை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த துளசிராமன், சாலையோரம் நின்று கொண்டிருந்த காரின் கதவு திறக்கப்பட்டதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து காரில் இருந்தவர்கள் துளசிராமனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாலையில் அடிபட்டு கிடந்ததாக சொல்லி அனுமதித்து சென்றுள்ளனர்.

ஆனால், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் துளசிராமன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அப்போதுதான் இறந்தது கு.க.செல்வத்தின் மருமகன் என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

பின்னர் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், மருத்துவமனையில் சேர்த்து விட்டு தப்பிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தற்செயலானதா அல்லது முன் விரோதமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொடரும் தற்கொலைகள்: ஆன்லைன் வகுப்பிற்கு செல்ஃபோன் கிடைக்காததால் மாணவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.