துபாயிலிருந்து சென்னை வந்த விமான பயணிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 பேரை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது அவர்கள் தங்களது ஆடைகள், பைகள் உள்ளிட்டவைகளில் தங்கத்திலான கட்டிகள், தகடுகள், செயின்கள், நாணயங்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.
இதையடுத்து 15 பேரிடமிருந்து ரூ.1.23 கோடி மதிப்புள்ள 2.4 கிலோ தங்கத்தை கைப்பற்றி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானப் பயணிகளிடம் வழக்கம்போல் சுங்கத்துறையினர் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சவுக்கத்தலி(28) என்பவர் உள்ளாடைக்குள் ரூ.12 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா், சவுதி ரியால் கரன்சிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.