சென்னை பாரிஸ் கார்னர் அருகில் பர்மா பஜாரில் சிலர் வெளிநாட்டு மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக மத்திய உளவு பிரிவு வடக்கு மண்டல டிஎஸ்பி கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் டிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான காவலர்கள், பர்மா பஜாரில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சிலர் வெளிநாட்டு மதுபானங்களை குடோனில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து பல லட்சம் மதிப்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுபாட்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமாகி ஆறு மாதங்களில் தற்கொலை செய்த இளம்பெண் - கணவர் கைது