ETV Bharat / city

'நலவாரிய உறுப்பினர்களுக்கு இரண்டாம் முறை நிவாரணம் ரூ.1000 வழங்கப்படும்'

சென்னை: பதிவு செய்த நலவாரிய உறுப்பினர்களுக்கு இரண்டாம் முறை நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

assembly
assembly
author img

By

Published : May 13, 2020, 5:41 PM IST

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பலதரப்பட்ட மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு நலவாரிய உறுப்பினர்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இந்நிலையில், அரசு இன்று வெளியிட்டுள்ள ஆணையில், 'தகுதியுள்ள வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டது போன்று, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

அதன்படி, மீனவர், வெடி ஆலைத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், பழங்குடியினர், நாட்டுப்புறக் கலைஞர்கள், தூய்மைப் பணியாளர்கள், கிராமக் கோயில் பூசாரிகள், திரைப்படத் தொழிலாளர்கள், நரிக்குறவர்கள், காதி, மூன்றாம் பாலினத்தவர்கள், தமிழ்நாடு புதிரை வன்னார், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள், சீர்மரபினர் ஆகிய நல வாரியங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட 8,39,950 உறுப்பினர்களுக்கு, ரூபாய் 86.05 கோடி செலவில் இரண்டாம் முறை நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.