ETV Bharat / city

இணையவழிக் கல்வியில் வீட்டுப் பாடத்தை குறைக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்! - MHC order

இணையவழிக் கல்வி
இணையவழிக் கல்வி
author img

By

Published : Aug 20, 2020, 5:28 PM IST

Updated : Aug 20, 2020, 6:10 PM IST

17:24 August 20

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, இணையவழி வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், செல்போன், லேப்டாப் போன்றவற்றை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக்கூறியும், இவ்வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் இன்று (ஆக.20) மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையவழி வகுப்புகளுக்கு மத்திய - மாநில அரசுகள் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளன. ஆனால், இணையவழி வகுப்புகள் நடக்கும்போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை என மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.  

நாள் முழுவதும் மாணவர்களை, பெற்றோர் கண்காணிக்க முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது. ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு, ஆபாச இணையதளங்களை தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்சியாக கணினியைப் பார்ப்பதால் மாணவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்ற நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.  

மேலும், அரசு மதுபானக் கடைகள் திறக்ககாட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, இணையவழி வகுப்புகளை தொடங்கும் முன் தமிழ்நாடு அரசு எடுக்கத் தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த கல்வி முறையால் கிராமபுற மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் இருப்பது, சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானது எனவும் வாதிடப்பட்டது.  

கிராமப் புறங்களிலும் 44 விழுக்காட்டினரும், நகரங்களில் 65 விழுக்காட்டினரிடம் மட்டுமே இணையதள வசதியுள்ளதால், இணையவழிக் கல்வி அனைவருக்கும் சென்று சேருவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. நான்கு மணி நேர வகுப்புகள் நடத்தினாலும் அதன்பின் வழங்கப்படும் வீட்டுப் பாடங்களும், கணினி மூலமே மாணவர்கள் மேற்கொள்கின்றனர். எனவே அரசுப் பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு இது சாத்தியமில்லை என தெரிவித்து, வகுப்புகளை குறைக்க வேண்டும் எனவும் வீட்டுப் பாடத்தையும், பாடத்திட்டத்தையும் குறைக்க வேண்டுமென பள்ளிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், மாதாந்திர தேர்வுகளை தள்ளிவைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Last Updated : Aug 20, 2020, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.