ETV Bharat / city

உதயநிதி பிறந்தநாள்: வாழ்த்திப் பாடி வரவேற்ற மாணவிகள் - MLA Udhayanidhi Stalin on his birthday

இன்று உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் நிலையில், முன்னதாக நேற்று சென்னையில் உள்ள பள்ளி கட்டடத்தைத் திறக்கச் சென்றபோது, அவரை மாணவிகள் வாழ்த்துப் பாடல் பாடி வரவேற்றனர்.

உதயநிதியை பிறந்தநாள் வாழ்த்து பாடி வரவேற்ற மாணவிகள்

author img

By

Published : Nov 27, 2021, 7:50 AM IST

சென்னை: தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நான்கு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அதனைத் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவம்பர் 26) திறந்துவைத்தார்.

4 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
4 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

அப்போது, பள்ளி மாணவிகள் உதயநிதியின் பிறந்தநாளை (நவம்பர் 27) முன்னிட்டு அவரை வாழ்த்தும் வகையில் வாழ்த்துப் பாடல் பாடி வரவேற்றனர்.

4 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
4 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, மயிலை சட்டப்பேரவை உறுப்பினர் வேலு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கடைசி 5 மாதங்களில் ரூ. 56,000 கோடிக்கு முதலீடு, 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.