சென்னை: டெட் தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு போன்றவற்றில் முறைகேடுகள், வழக்குகள் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் திட்டமில்லை எனவும்; ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறனாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் விளக்கமளித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை, டிஎன்பிஎஸ்சி உடன் இணைக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்திய நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை கருத்துக் கேட்பு