சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்துவருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் செப். 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் திறக்கப்பட்ட 27 நாட்களில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக கோயம்பத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மாணவர்களிடையே கரோனா தொற்று அதிகம் பரவிவருகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன. அதோபோல கல்லூரிகளும் மூடப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் எச்சரிக்கை...