சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைந்துவருவதைத் தொடர்ந்து செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் திறக்கப்பட்ட 25 நாட்களில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக கோயம்பத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மாணவர்களிடையே கரோனா தொற்று அதிகம் பரவிவருகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படும் பள்ளிகள் தற்காலிமாக மூடப்பட்டுவருகிறது. அதேபோல மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.