ETV Bharat / city

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: கொள்ளையரை 7 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு - எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட விரேந்தர் ராவத் என்ற கொள்ளையரை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு, விரேந்தர் ராவத்
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு
author img

By

Published : Jun 28, 2021, 10:52 PM IST

சென்னை: சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜுன் 15,16,17,18 ஆகிய தேதிகளில் எஸ்பிஐ வங்கியின் கேஷ் டெபாசிட் மிஷின் ஏடிஎம்-ஐ மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் பணத்தை கொள்ளையடித்தது. தமிழ்நாடு முழுவதும் 21-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஏடிஎம்களில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கபட்டது தெரியவந்தது.

ஹரியானா கும்பல்

குறிப்பாக, சென்னையில் மட்டும் இதுகுறித்து 15 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். ஹரியானாவை சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மூன்று பேர் கைது

இதனையடுத்து, துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தனிப்படையினர் ஹரியானா மாநிலத்திற்கு விரைந்தனர். சிசிடிவி அடையாளங்களை வைத்து அமிர் அர்ஷ், வீரேந்தர் ராவத், நதீம் ஹுசைன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐந்து நாள் காவல்

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆறு பேரை ஹரியானாவில் காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும்,கொள்ளையடித்த பணம் குறித்தும் விசாரிக்க, கைதான அமிர் அர்ஷை காவலர்கள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இரண்டு பேர் குழு

மேலும், கொள்ளை நடத்திய ஏடிஎம்மிற்கு அவர்கள் அழைத்துவந்து கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என செய்து காட்டி, அதை வீடியோவாக காவல் துறையினர் பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி, இரண்டு, இரண்டு பேர் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக தங்களது வாக்குமூலத்தில் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், நாளையுடன் (ஜுன் 29) அமித் அர்ஷின் போலீஸ் காவல் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இரண்டாவதாக கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத்தை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தரமணி காவல்துறையினர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கவுள்ளது.

இதையும் படிங்க: நீட் குறித்து கேள்வி எழுப்ப அதிமுகவினருக்குத் தகுதி இல்லை - சொல்கிறது காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.