ETV Bharat / city

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரம்! - satyabrata sahoo

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறுகின்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆறு கம்பெனி துணை ராணுவத்தினரின் உதவி கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சத்யபிரத சாகு
author img

By

Published : Oct 1, 2019, 6:02 PM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தத்திற்கான காலக்கெடு 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாக்காளர் பெயர் சரிபார்ப்பு திட்டத்தில் இதுவரை 23 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் பெயர், முகவரியை சரி பார்த்ததாகவும், மொபைல் செயலி மூலம் ஒன்பது லட்சம் பேரும், சேவை மையம் மூலம் 12 லட்சத்து 85 ஆயிரம் பேரும் பெயர், முகவரியை சரிபார்த்துள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவினர் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தது தொடர்பாக திமுக கொடுத்த புகார் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஆறு கம்பெனி துணை ராணுவத்தினரின் உதவி கேட்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குழந்தையை துன்புறுத்திய தந்தை... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Intro:Body:*இடைத்தேர்தல் நடைபெறுகின்ற நாங்குநேரி மற்றும் விக்ரவண்டி தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.*

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தத்திற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாக்காளர் பெயர் சரிபார்ப்புப் திட்டத்தில் இதுவரை 23லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் பெயர் மற்றும் முகவரியை சரி பார்த்ததாகவும் மொபைல் செயலி மூலம் மட்டும் 9 லட்சம் பேரும், சேவை மையம் மூலம் 12 லட்சத்து 85 ஆயிரம் பெரும் பெயர் மற்றும் முகவரியை சரிபார்த்து உள்ளதாக கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவினர் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தது தொடர்பாக திமுக புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் விக்ரவண்டி, நாங்குநேரி தொகுதியில் பாதுகாப்பு பணிக்காக தலா 3 கம்பெனி துணை ராணுவம் என மொத்தமாக 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.