இது தொடர்பாக, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டன என்பதால், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் தனித்தனியாக நடத்தப்படுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
ஊராட்சிமன்றத் தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், ஒன்றியப் பஞ்சாயத்து உறுப்பினர், மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதி உள்ளதால், வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதுதொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். அதற்குப் பதிலளித்த ஆணையம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என விளக்கமளித்துள்ளதால், ஒன்றாக சேர்த்து முடிவுகளை வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தாலும், வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடப்பதையும் அம்மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு டிசம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் - திமுக திடீர் வழக்கு!