சென்னை: வரும் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வதாக அவர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகத்திலிருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 5ஆம் தேதி காலை 11 மணியளவில் சசிகலா, கட்சித் தொண்டர்களுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்