ETV Bharat / city

விரைவில் அதிமுக நம் கையில் வரும்... சீறும் சசிகலா!

விரைவிலேயே அதிமுக நம் கைக்கு வரும், ஜெயலலிதாவின் ஆசையை உறுதியாக கொண்டுவருவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்

author img

By

Published : Feb 3, 2022, 4:11 PM IST

சென்னை: தி.நகரில் சசிகலா இல்லத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 53ஆவது நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, “அண்ணாவின் இதயக்கனியாக எம்ஜிஆர் இருந்தார். இயக்கத்தை தொடங்கினார். நாங்களும் அண்ணாவை வணங்குகிறோம். எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் தொண்டர்கள் இந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவார்.

நிச்சயம் விரைவில் அதிமுக நமது கைக்கு வரும். ஜெயலலிதாவின் ஆசையை உறுதியாக கொண்டுவருவோம். எந்தக் கட்சியாக இருந்தாலும், கட்சியை தற்போது மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தொண்டர்கள் பொதுமக்கள் எல்லோரையும் நினைத்து செயல்பட வேண்டும்.

எதையும் எடுத்தோம், கவுத்தோம் என்று செயல்படக்கூடாது அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். தொண்டர்களை சந்திக்கவில்லை எனக் கேட்ட கேள்விக்கு? உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கரோனா தொற்று அதிகமாக இருக்கிற காரணத்தினால் தற்போது சந்திக்க இயலவில்லை.

மிக விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திப்பேன். கடந்த 8 மாத காலத்தில் ஆட்சியைப் பற்றி மக்கள் புரிந்து இருப்பார்கள்! யார் இருந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் புரிந்து கொண்டார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: வெள்ளி படிச்சட்டத்தை திருடிய அர்ச்சகர், தீட்சிதர் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.