சசிகலா நாளை(ஜனவரி 31) காலை 10 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக, பெங்களூரு மருத்துவமனை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் (விக்டோரியா மருத்துவமனை) தெரிவித்துள்ளது. இதனால் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அமமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள பெங்களூரு மருத்துவமனை கல்லூரி மற்றும் ஆய்வு மையம்(விக்டோரியா மருத்துவமனை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சசிகலா இன்றுடன்(ஜனவரி 30) 10 நாட்களுக்கான சிகிச்சையை முடித்துள்ளார். தற்போது அவருக்கு எந்தவொரு தொற்று அறிகுறியும் இல்லை. கடந்த மூன்று நாட்களாக ஆக்ஸிஜன் இல்லாமல் சுவாசித்து வருகிறார்.
மருத்துவமனை நெறிமுறைப்படி, அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம்.
இதுதொடர்பாக மருத்துவக்குழு எடுத்த முடிவின்படி, சசிகலா டிஸ்சார்ஜ் தகுதியானவர்; அவரை நாளை (31.01.2021) விடுவித்து, அவரை வீட்டில் சுயதனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயங்காது - பிரேமலதா அதிரடி