ETV Bharat / city

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கு - சசிகலா தரப்பினர் பதில் அளிப்பதாக சிவில் நீதிமன்றத்தில் விளக்கம்

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதா? அல்லது தொடர்ந்து நடத்துவதா? என சசிகலாவிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

madras high court
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Mar 15, 2021, 2:15 PM IST

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ. ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் அதிமுகவின் பொது செயலாளராக வி.கே சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் அதிமுகவினரால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த சமயத்தில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு

அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர், துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கில், வழக்கு கட்டணமாக 25 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், கட்சியின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, வங்கிகளின் மேலாளர்கள் வங்கிக் கணக்குகளை சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினருக்கு வழங்கினர். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சிவில் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்

நீதிமன்ற கட்டணமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தும் வழக்குகளை மட்டுமே உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை நகர சிவில் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு இன்று (மார்ச் 15) விசாரனைக்கு வந்தபோது, ஏற்கனவே தேர்தல் ஆணையம் இந்த மனுவை நிராகரித்ததாகவும், அதனை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டதால், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது.

டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது அமமுக என்ற கட்சியை டிடிவி தினகரன் தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்துதான் விலகி கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது மனுவை திரும்பப் பெறுவதா என்பது தொடர்பாக சசிகலாவிடம் தகவல் கேட்டு தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் மரணத்துக்கு கருணாநிதியும், முக ஸ்டாலினும்தான் காரணம்- எடப்பாடி பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.