ETV Bharat / city

'பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை' - சரத்குமார் கோரிக்கை - 800 பட விவகாரம்

சென்னை: சமூக வலைதளங்களில் பெண்குழந்தைகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சரத்குமார்
சரத்குமார்
author img

By

Published : Oct 21, 2020, 5:14 PM IST

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியானதிலிருந்தே எதிர்ப்புகள் எழத் தொடங்கின.

'800' படத்திலிருந்து விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் வலுக்கவே விஜய் சேதுபதியை இப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டார்.

அவரது அறிக்கையை ஏற்றுக்கொண்ட விஜய் சேதுபதி, ட்விட்டரில் நன்றி, வணக்கம் எனக்கூறி இப்படத்திலிருந்து விலகினார். இந்நிலையில், ரித்திஷ் என்ற நபர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்திருந்தார். மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்பி கனிமொழி உள்பட பலரும் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதளத்தில், "சமூக வலைதளங்களில் தரம்கெட்டு, தராதரம் கடந்து கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பெண் குழந்தைகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன்.

உரிமை, சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம், என்ன நடக்கப்போகிறது என மெத்தனமாக சமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் அயோக்கியர்களை தமிழ்நாடு அரசு மட்டுமல்லாது மத்திய அரசும் உடனடியாக கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கி இதுபோன்ற தரம்கெட்ட செயல்களை கட்டுப்படுத்தி ஒழுக்கத்துடன் சமூகம் சீரடைய செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.